ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆதி பிரம்மோத்ஸவ தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2025 12:04
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் இன்று கோரதம் தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது.
வைணவ திவ்யதேசங்கள் 108ல் முதன்மையானதும், ஆழ்வார்கள் பதின்மரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், பூலோக வைகுண்டமுமான திருவரங்கம் திருக்கோயில் ஆதிபிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோரதம் புறப்பாடு இன்று நடைபெற்றது. முன்னதாக தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, கோரதத்தில் தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.