பதிவு செய்த நாள்
13
ஏப்
2025
05:04
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பூமி நீளாபெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், 20ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா நடந்து வருகிறது.
விழாவை ஒட்டி இதுவரை, பெருமாள் சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அலங்காரம், முத்து பந்தலில் முத்தங்கி அலங்காரம், அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் அலங்காரம், கருட வாகனம், திருக்கல்யாண உற்சவம், யானை வாகன நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை, 6:00 மணிக்கு திருத்தேர் விழா நடந்தது. மாலை குதிரை வாகனம், பரிவேட்டை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று மாலை சேஷ வாகனத்தில், வைகுண்ட நாதன் அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். இரவு, 8:00 மணிக்கு தெப்பத்தேரும், 15ம் தேதி மாலை, 6:00 மணிக்கு பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்தவாரி நடக்கிறது. விழாவை ஒட்டி திவ்ய பிரபந்த சேவா காலம் தினமும் மதியம், 2:00 மணி முதல், 6:00 மணி வரை கோவில் வளாகத்தில் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.