திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2025 10:04
திருநெல்வேலி; திருநெல்வேலியில் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டு முதல் மூன்று நாட்களுக்கு சூரிய ஒளி மூலவர் மீது விழும் நிகழ்வை பக்தர்கள் வழிபட்டனர்.
திருநெல்வேலி ஜங்ஷன் தாமிரபரணி ஆற்றங்கரையில் மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோவில். பழமையானதாகும். ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள விநாயகரின் தனிக் கோயிலாகும். தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ஏப்ரல் 14 முதல் 3 நாட்கள் காலையில் சூரிய ஒளிக்கதிர்கள் மூலவர் மீது விழும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வைத் திரளான பக்தர்கள் தரிசித்தனர். சூரிய ஒளி நேரடியாக மூலவர் மீது விழும் வகையில் கட்டிடக்கலை அமைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவில், சங்கரன்கோவில் சங்கரநயினார் சுவாமி கோயில் உட்பட மேலும் சில கோவில்களிலும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தினங்களில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் வகையில் கட்டிடக்கலை அமைக்கப்பட்டுள்ளது.