பதிவு செய்த நாள்
28
ஏப்
2025
12:04
பாகூர்; சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. பாகூர் அடுத்த சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன், செல்வ விநாயகர், திருமுறைநாயகி உடனுறை ஜோதி லிங்கேஸ்வரர், சிவகாம சுந்திரி உடனுறை ஆனந்த நடராஜர், பக்த ஆஞ்சநேயர், குடிதாங்கி அம்மன், பரந்துகட்டி அய்யனார், ஐயப்பன், கோகுல கண்ணன் கோவில்கள் உள்ளது. இக்கோவில்களின் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 10ம் தேதி நடந்தது. அதனை தொடர்ந்து, மண்டலாபிஷேகம் துவங்கி நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதனையொட்டி, காலை 7.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், பரந்து கட்டி ஐயனார் கோவிலில் மண்டலாபிேஷக ேஹாமம் நடந்தது. 9.00 மணிக்கு, பக்த ஆஞ்சநேயர், கோகுல கிருஷ்ணன் கோவில்களில் பூர்த்தி ஹோமம், மகா தீபாரதனை நடந்தது. 3.35 மணிக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா துவங்கியது. மாலை 6.00 மணிக்கு 108 சங்காபிேஷகமும், மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி உள் புறப்பாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன், திருப்பணி குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.