வானுார்; பெரம்பை ஏழை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. வானுார் அடுத்த பெரம்பை கிராமத்தில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 19ம் தேதி துவங்கியது. அன்று ஏழை மாரியம்மன் மற்றும் செங்கழுநீரம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. இரவு விநாயகர், முருகர், அய்யனாரப்பன், பூரணி பொற்கலை சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று ஏழை மாரியம்மனுக்கு சந்தன அபிஷேகமும், மதியம் 1;00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 4;30 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. இன்று காலை 9:30 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. மாட வீதி வழியாக நடந்த விழாவில் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். 23ம் தேதி இரவு 7;00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.