நத்தம்; நத்தம் அருகே கோட்டையூர் ஊராட்சி குரும்பபட்டி மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதில் நேற்று முன்தினம் இரவு முத்தாலம்மன் தீவட்டி பரிவாரங்கள், வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக மேளதாளம் முழங்க கோவில் முன் உள்ள மந்தைக்கு சென்றது.பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் ,மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.பின்னர் நேற்று மாலை வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குரும்பபட்டி ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.