பதிவு செய்த நாள்
15
டிச
2012
10:12
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் சாதுக்கள் திருக்கூட்ட ஊர்வலம் நடந்தது. திருவண்ணாமலை திருக்கூட்ட மடத்தைச் சேர்ந்த சாதுக்கள் 50க்கும் மேற்பட்டோர் கார்த்திகை தீபம் அன்று கிரிவலம் வருவார்கள். பிறகு பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் திருக்கூட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பட்டம் கட்டி நடைபயணத்துக்கு தலைமையேற்று நடத்தக் கூறி வழியனுப்பி வைப்பார். தீபத்தின் மறுநாள் திருவண்ணாமலையில் இருந்து சாதுக்கள் திருக்கூட்டம் புறப்பட்டு நடைபயணமாக திருக்கோவிலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், சீர்காழி, கும்பகோணம், திருச்சி, கோவை, உடுமலை, பழனி வரை செல்வார்கள். அவ்வாறு செல்லும்போது வழியில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்வது வழக்கம். நெல்லிக்குப்பம் வந்த சாதுக்கள் திருக்கூட்டத்தை முன்னாள் கவுன்சிலர் ராஜ்குமார், மணிகண்டன், அழகிரி, ராஜேந்திரன் வரவேற்றனர். சாதுக்கள் மகேஸ்வர பூஜை நடத்தி ஆன்மிக சொற்பொழிவாற்றினர்.
வெங்கட், ஆறுமுகம், ராமதுரை, சுப்ரமணி உட்பட ஏராளமான சாதுக்கள் கலந்து கொண்டு பூஜைகளை செய்தனர்.