Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி ... அரகண்டநல்லுார் அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா அரகண்டநல்லுார் அதுல்ய நாதேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2025
10:06

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது.


சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 31 மாலை 6:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 10:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அலங்காரத்தில் கோயில் கொடி மரம் முன் அம்மன் எழுந்தருளினார். மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினமும் காலை 9:00 மணிக்கு அம்மன் வெள்ளி கேடகத்திலும், இரவு 7:00 மணிக்கு சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 7 மாலை 6:00 மணிக்கு கோயில் உட்பிரகாரத்தில் அம்மன் தங்க ரதத்தில் வலம் வருகிறார். ஜூன் 8 மாலை 6:10 மணிக்கு வெள்ளி ரதத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வருவார்.


ஜூன் 9ல் தேரோட்டம்; ஜூன் 9 ல் தேரில் கண்ணுடைய நாயகி அம்மன் எழுந்தருள்வார். காலை 9:25 மணிக்கு தேரோட்டம் துவங்கி, நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து நிலையை அடையும். ஜூன் 10ல் காலை பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்தி செலுத்துவர். ஜூன் 11ல் ஊஞ்சல் உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் கணபதிராமன் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar