Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 100 ஆண்டு பழமையான விநாயகர் கோவில் ... மதுரையில் முருக பக்தர் மாநாடு; மேட்டுப்பாளையம் கோவிலில் வேல் பூஜை மதுரையில் முருக பக்தர் மாநாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் வைகாசித் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் வைகாசித் திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2025
11:06

சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா துவங்கியது.


சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக மே 22 ல் கோயில் உற்சவ விநாயகர் கிராமத்தில் உள்ள சந்திவீரன் கூடத்தில் எழுந்தருளி காணிக்கை பெற்றார். பத்து நாட்கள் விநாயகருக்கு அங்கேயே அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை 10:30 மணிக்கு காணிக்கை பணத்துடன் விநாயகர் மீண்டும் கோயில் திரும்பியதைத் தொடர்ந்து திருவிழா தொடங்கியது. மதியம் 1:35 மணிக்கு சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து 1:45 மணிக்கு பிடாரியம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. 2:15 மணிக்கு சேவுகப்பெருமாள் ஐயனார் சன்னதி முன்பாக உள்ள பிரதான கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா துவங்கியது. சிவாச்சாரியார்கள் பாரம்பரிய முறைப்படி ஏடு படித்து ஐயனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டினர். 10 நாள் மண்டகபடியாக தினமும் பகல், இரவு நேரங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. ஜூன் 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு பூரணை, புட்கலை உடனான சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஜுன் 6 ம் தேதி கழுவன் விரட்டு திருவிழா, ஜூன் 9ஆம் தேதி தேரோட்டம், ஜூன் 10ஆம் தேதி பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராமத்தார்கள், தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar