பதிவு செய்த நாள்
17
டிச
2012
11:12
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா, டிச.,19 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும், சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளும், காலையில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், இரவில், சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் வாகன புறப்பாடு, வீதிவுலா காட்சி நடக்கிறது.டிச., 27ல், தேர் திருவிழா நடக்கிறது. மறுநாள், அதிகாலை, 4:00 மணிக்கு சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு, விசேஷ மகா அபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் மற்றும் செயல் அலுவலர், சிவக்குமார் செய்து வருகின்றனர்.