Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் ... நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரவில் மலர்ந்த நிஷா காந்தி பூக்கள்: நினைத்த காரியம் கைகூட கற்பூரம் ஏற்றி வழிபட்ட மக்கள்
எழுத்தின் அளவு:
இரவில் மலர்ந்த நிஷா காந்தி பூக்கள்: நினைத்த காரியம் கைகூட கற்பூரம் ஏற்றி வழிபட்ட மக்கள்

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2025
03:06

கூடலூர்; கூடலூரில், நள்ளிரவில் மலர்ந்த நிஷாகாந்தி பூக்களுக்கு, குடும்பத்தார் கற்பூரம் ஏந்தி நினைத்த காரியம் கைகூட வணங்கினர்.


பிரம்ம கமலம் என, அழைக்கப்படும் நிஷாகாந்தி பூக்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில், ஒரு இரவில் மலர்ந்து, சூரிய உதயத்திற்கு முன் வாடிவிடும். பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள இந்த செடிகளை கூடலூர் பகுதியில் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். தற்போது இந்த செடிகளில், நள்ளிரவில் வெண்மை வண்ணத்தில் பூக்கும் பூக்களும், அதிலிருந்து வீசும் தெய்வீக நறுமணமும் அனைவரையும் கவர்ந்து வருகிறது. கூடலூர் சேர்ந்த தாசில்தார் சித்துராஜ் என்பவர் வீட்டில் வளர்த்து வரும் செடியில் இருந்து நேற்று முன்தினம், நள்ளிரவு பூக்கள் மலர்ந்தது. குடும்பத்தார், கண்விழித்து, நினைத்த காரியம் கைகூட பூக்களுக்கு கற்பூரம் ஏற்றி வணங்கினர். இதன் வாசம் அப்பகுதி முழுவதும் வீசியது. மக்கள் கூறுகையில், நள்ளிரவில் பூக்கும் இந்த செடியிலிருந்து வரும் வாசனை சந்தனமும், பன்னீரும் கலந்த தெய்வீக நருமணம் போன்று இருக்கும். இதனை வீட்டில் வளர்த்தால் நேர்மறை ஆற்றல், வெற்றி, மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்தப் பூக்களை வேண்டி வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும் என்றனர்.


தாவர ஆய்வாளர்கள் கூறுகையில்; கள்ளிச்செடி இனத்தைச் சேர்ந்த இவைகள், அதிக அளவில் ஆக்சிஜனை வெளிப்படுத்துகிறது. அழிந்து வரும் பலர் இனங்களில், இதனையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களை பாதுகாத்து வளர்ப்பது அவசியம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் காஞ்சி மடாதிபதிகள் ஆசியுடன் விஸ்வவாசு சாதுர்மாஸ்ய அக்னிஹோத்ர சதஸ் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா ... மேலும்
 
temple news
மயிலம்; மயிலம் முருகன் கோவில் சஷ்டி பூஜை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலம் வள்ளி, ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலை புனிதப்படுத்தும் விதமாக ‛பவித்ர உற்சவ’ பூஜை ஆக., 1 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை, கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மலையப்ப சுவாமி தனது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar