தஞ்சாவூர்;தஞ்சாவூர் பெரியகோவிலில், ஆண்டுதோறும், ஆனி மாதம் பெருவுடையாருக்கும், பெரியநாயகிய அம்மனுக்கும், திருக்கல்யாண வைபவம் மிக கோலகலமாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி, நேற்று நடைபெற்ற திருக்கல்யான வைபவத்தில். ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, பழங்கள்,குங்குமம், மஞ்சள் திருமாங்கல்ய சரடு,வளையல்,கண்ணாடி, ரீப்பன், வெற்றிலை பாக்கு போன்றவற்றை சீர்வரிசையாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரகங்கள் முழங்க, மாப்பிளை அழைப்பு உட்பட சம்பிரதாய சடங்குகள், ஹோமம் நடந்து முடிந்து, பெரியநாயகி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அதன் பிறகு தீபராதனை காண்பிக்கப்பட்டன. பிறகு, பெரியநாயகி சமேத பெருவுடையார் திருக்கல்யாண கோலாத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில், பக்தர்களுக்கு திருக்கல்யாண பிரசாதங்களும், திருமணம் நடக்காத இளம் பெண், ஆண்களுக்கு பெரியநாயகி அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலையை அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. இந்த திருக்கல்யாணத்தில் நுாறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபட்டு சென்றனர். விழாவிவுக்கான, ஏற்பாடுகளை அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கவிதா, கோவில் கண்காணிப்பாளர்கள் ரவி, சத்யராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.