தேவகோட்டை; தேவகோட்டை அருகே கொத்தங்குடி கிராமத்தில் உள்ள இடையன் காளியம்மன் கோயிலில் முதல் ஆடி வெள்ளி விழா நடைபெற்றது. காலையில் காளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து ராமன் அருள்வாக்கு கூறினார். இதனைத் தொடர்ந்து பல பகுதிகளை சேர்ந்த 1500 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். சங்கரன் குருக்கள் தலைமையில் பூஜகர்கள் விளக்கு பூஜையை வழிநடத்தினர் . இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் விருந்து நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி ராமன் தலைமையில் கிராமத்தினர், யாதவ சமூகத்தினர் செய்திருந்தனர்.