அன்னப்பட்சி வாகனத்தில் செங்கல்வராய சுவாமி வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2025 06:07
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ செங்கல்வராய சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று காலை நான்கு மாட வீதிகளில் அன்னப்பட்சி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய சுவாமிகளை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலில் இருந்து ராஜ் கோபுரம் வரை சென்று அங்கு அன்னபஷி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கோயில் மேற்பார்வையாளர் நாகபூஷண யாதவ், கோயில் ஆய்வாளர் வெங்கட் சுவாமி, அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.