ஊத்துக்கோட்டை; பவானியம்மன் கோவிலில் ஆடி மாத விழாவை ஒட்டி, பந்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது. தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் 14 வாரங்கள் சிறப்பு பூஜை மற்றும் உற்சவர் அம்மன் வீதியுலா நடைபெறும். நடப்பாண்டிற்கான ஆடி மாத விழாவுக்கு நேற்று பந்தக்கால் நடப்பட்டது. காலை 5:00 மணிக்கு கோ பூஜை, மூலவர் சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதானை காட்டப்பட்டது. காலை 6:00 – 7:30 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், தண்டலம், கன்னிகைப்பேர், ஆரணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.