மயிலாடுதுறை காவிரி துலா கட்டம், திருவெண்காடு ருத்ரபாதத்தில் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2025 12:07
மயிலாடுதுறை; ஆடி அமாவாசை - பூம்புகார் சங்கமத்துறை, மயிலாடுதுறை காவிரி துலா கட்டம் மற்றும் திருவெண்காடு கோவில் ருத்ரபாதத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரில் காவிரி கடலுடன் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ஆயிரக்கணக்கானோர் கூடி சமய ஆச்சாரியார்களை கொண்டு மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் தட்சணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை தினமான இன்று முன்னோர்களை வழிபட்டு அவர்களது ஆசீர்வாதங்களை பெறுவதற்காகவும், பித்ரு தோஷம் உள்ளவர்களும் அரிசி, காய்கறிகள், பழங்கள், தானியங்களை வைத்து திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அவர்கள் பல்வேறு தானங்களையும் வழங்கினர். திருவெண்காடு சுயதாரனேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள மூன்று தீர்த்தங்களில் நீராடியவர்கள் ருத்ரபாதத்தில் சிவாச்சாரியார்களைக் கொண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். இதுபோல மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் நீராடி கரையில் அமர்ந்து தானம் போட்டு தர்ப்பணம் செய்து திதி கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர்.