சென்னை பாலவாக்கம் அருகே கண்ணகி நகர் பகுதியில் 2001ஆம் ஆண்டு பெரியபாளையத்தம்மன் கோவில் சிறிய ஓலை குடிசையில் அமைத்து வழிப்பட்டனர். அதன்பின், 2005ம் ஆண்டு அரச மரம் நட்டு வாழிபாடு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து, ஊர் மக்கள் நன்கொடை வாங்கி 2007ம் ஆண்டு கோவில் கட்டப்பட்டது. ஆடிமாதம் ஐந்தாம் ஆண்டு நான்கு நாட்கள் திருவிழா நடைபெறும். திருமணம் ஆகாத பெண்கள் அம்மனிடம் வேண்டினால் திருமணம் நடைபெறும், குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 12 ஆண்டிற்கு பின், கோவிலை புதுபித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 24ம் ஆண்டு முடிந்து 25 ஆம் ஆண்டு துவக்கத்தில் ஆடி மாதம் 5ம் ஆண்டு திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் அலங்கார விளக்குகள், பால்குடம் எடுத்து வருதல், 2 நாட்களுக்கு அன்னதானம், இசைக்கச்சேரி, நாடகம், அம்மன் அலங்கார தேர், தீமிதித்தல், அம்மனுக்கு விஷேச அபிஷேகம் நடைபெற உள்ளது.