சிவராத்திரி, திருவாதிரை விரதம்; சிவனை தரிசித்து கயிலாயத்தில் வாழும் பேறு பெறுவோம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2025 11:07
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். ஆடல்வல்லானை வழிபட சிறந்த தினம் திருவாதிரை. நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலேயே அண்டசராசரங்களும் இயங்குகின்றன. முருகப்பெருமான் திருவாதிரை விரதம் இருந்து ஈசனின் அருள்பெற்றார். சுவாமிக்கு களி, தயிர்ச்சாதம், சுண்டல் நிவேதனம் செய்வது வழிபடுவது சிறப்பு.
சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று பொருள். சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் நன்மை பெருகும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பதற்கு பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை சிருஷ்டிக்க உமாதேவி சிவனைபூஜித்து ஒரு இரவு முழுவதும் இருந்த விரதமே சிவராத்திரி விரதம். மற்றொரு கதையின்படி, சிவனின் கண்களை பார்வதிதேவி மூடியதாகவும், இதனால் உலகம் இருண்ட நேரத்தை சிவராத்திரியாக அனுஷ்டிப்பதாகவும் கூறுகிறார்கள். பல்வேறு சிறப்பு மி்க்க நாளான இன்று அம்மன், பெருமாள், சிவனை வழிபட்டு வேண்டிய வரத்தை பெறுவோம்.