மேட்டுப்பாளையம்; ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை அடுத்து, அம்மன் கோவில்களில் அலங்கார பூஜைகள் நடந்தன.
மேட்டுப்பாளையம் அடுத்த ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, அம்மன் சுவாமிக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் தலைமை பூசாரி பழனிசாமி, அருள்வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகியோர் செய்து இருந்தனர்.
மேட்டுப்பாளையம் காட்டூர் ஜெகநாதன் லே அவுட்டில் உள்ள தவிட்டு மாரியம்மன் கோவிலில், ஆடி மாதம் இரண்டாவது வெள்ளி பூஜை நடந்தது. கோவில் நடை திறந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, வேப்ப இலை காப்பால், அம்மன் சுவாமிக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்தனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.