Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ர தரிசன ... சபரிமலையில் கற்பூர ஆழி பூஜை! சபரிமலையில் கற்பூர ஆழி பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 டிச
2012
10:12

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், வரும் 24ம் தேதி, வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடக்க இருப்பதை முன்னிட்டு, விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், வரும் 24ம் தேதி, வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம், அதிகாலை 4:30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலைய துறை மேற்கொண்டு வருகிறது.

வி.ஐ.பி., பாஸ் இல்லை: பார்த்தசாரதி சுவாமி கோவிலில் இந்த ஆண்டு முதன் முறையாக, முக்கிய பிரமுகர்களுக்கு, தனியாக வி.ஐ.பி., பாஸ் எதுவும் வழங்கப்படவில்லை. ஒரே வகையில் மொத்தமாக வழங்கப்படும், இந்த அட்டைகள், தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதால், இந்தாண்டு, "பேட்ஜ் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதாவது முக்கிய பிரமுகர், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு, பதவி மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்ட, "பேட்ஜ் வழங்கப்படும். பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக, இத்தகைய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைய துறை தெரிவித்துள்ளது.

கட்டணமில்லா தரிசனம்: வழக்கம் போல, ஊடக துறையினருக்கு மட்டும், "சிறப்பு பாஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல, "கட்டணமில்லா தரிசன முறையும் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. முதலில் வரும் 1,000 பக்தர்கள், கட்டணமில்லாமல் தரிசிக்கலாம். இதை தொடர்ந்து, பகலில் தரிசன கட்டணமாக, 100 ரூபாய் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பரமபத வாசல் தரிசனம், மூலவர் தரிசனம் என்று தனி தனியாகவும், இரண்டும் ஒன்றாகவும் பக்தர்கள் விரும்பியவாறு தரிசனம் செய்யலாம்.

வசதிகள்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவிலில் இலவசமாக லட்டு மற்றும் பிரசாதம், கோவில் வழிகளை விளக்க தகவல் மையம், மருத்துவ முதலுதவி, தீயணைப்பு, குடிநீர், பேருந்து வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கோவிலில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், பெரிய திரை அமைக்கப்பட்டு, வழிபாட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன. மேலும், கோவிலுக்குள், கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar