திருப்பதி ஸ்ரீ சங்கர மடத்தில் ஸ்ரீவித்யா ஹோமம்; காஞ்சி மடாதிபதிகள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2025 05:08
திருப்பதி; திருப்பதியில் உள்ள ஸ்ரீ சங்கர மடத்தில் காஞ்சி மடாதிபதிகள் ஆசியுடன் ஸ்ரீவித்யா ஹோமம் நடைபெற்றது.
திருப்பதி, மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் மற்றும் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வருகின்றனர். செப் 07ம் தேதி வரை நடைபெறும் விழாவில் இன்று காலை அகில பாரத சுவாசினி பிக்ஷாவந்தனத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீவித்யா ஹோமம் பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சாங்க சதஸ், பலவித மாஸ்த்ர ஸதஸ்ஸுகள், வேத பாஷ்ய சதஸ், அத்வைத வேதாந்த சதஸ், உபந்யாஸங்கள், பக்தர் குழாம்களின் சிறப்பு பிக்ஷாவந்தனங்கள் மற்றும் ஸங்கீத வாத்ய நாமஸங்கீர்த்தன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.