திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலில் ஜேஸ்டாஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2025 04:08
திருவெள்ளறை : ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின் உப கோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயிலின் ஜேஸ்டாபிசேகத்தை முன்னிட்டு இன்று (5ம் தேதி) காலை 7 மணி அளவில் வட திருகாவிரியிலிருந்து ( கொள்ளிடம் ஆறு)தங்கம், வெள்ளி குடத்தில் புனித நீர் சுமார் 12 கிமீ எடுத்து செல்லப்பட்டு புனிதீர்த்தம் எடுத்து, நொச்சியம் கரையில் இருந்து மண்ணச்சநல்லூர் வழியாக வெள்ளிக் குடத்தை வழியில் எங்கும் கீழே வைக்காமலும் , நிற்காமல் ஓடிக்கொண்டே குடங்களை மாற்றி காலை 9.00 மணி அளவில் திருவெள்ளறை குசஹஸ்த தீர்த்தம் அடைந்தது. அங்கிருந்து ஆண்டாள் யானை மீது தங்ககுடத்தில் புனித தீர்த்தம் எடுத்து மங்கள இசையுடன் புண்டரீகாட்சப் பெருமாள் சன்னதி சென்றடைந்தது. பின்னர் ஜேஸ்டாஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.