வேலுார் அடுத்த அன்பூண்டியில், அறநிலையத்துறைக்கு சொந்தமான, 1,000 ஆண்டு பழமையான, சோழர் காலத்து திருத்தாளீஸ்வரர் கோவில் உள்ளது. இது பராமரிப்பின்றி சிதிலமடைந்து உள்ளதால், அதை, அறநிலையத்துறை சார்பில், 1.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்க பொக்லைன் இயந்திரம் கொண்டு சீரமைக்கும் பணி தொடங்கியது. அப்போது, விநாயகர், அம்மன், விஷ்ணு, நடராஜர் ஆகிய, இரண்டடி உயர, 4 ஐம்பொன் சிலைகள், மண் அரித்த நிலையில் கிடைத்தது. வேலுார், வருவாய்த்துறையினர் சிலைகளை மீட்டனர். இந்நிலையில், தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, அவர்கள் அனுமதியளித்த பின்னர், கோவிலில் அடுத்த கட்ட பணி தொடங்க உள்ளது.