வடமதுரை; அய்யலுார் காக்காயன்குளத்துபட்டி பால விநாயகர், பாலமுருகன, மகாசக்தி நாகம்மன், கருப்பசாமி, சங்கிலிமுனியாண்டி, நவகிரகங்கள், கன்னிமார் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக நேற்று தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் இன்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் நிறுவனர் ராஜ் முன்னிலை வகித்தார். விராலிமலை தேராவூர் கல்குறிச்சி அய்யனார் கோயில் தலைமை அர்ச்சகர் பாஸ்கரன் சிவாச்சாரியர் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.