திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சி கைக்கொள்வார் மடத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு சக்தி கரகமும் முளைப்பாரி ஊர்வலமும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. நேற்று காலை முதல் மாலை வரை கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. மாலை முளைப்பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கைக்கொள்வார் மட கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.