பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2025 11:08
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் செய்யப்பட்டு இன்று வெள்ளோட்டம் நடைபெற்றது.
நகரத்தார் கோயிலான பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சதுர்த்திப் பெருவிழா பத்துநாட்கள் நடைபெறும். இவ்விழாவில் 9ம் திருநாளில் நடைபெறும் தேரோட்டத்தில் கற்பகவிநாயகர் தேரிலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும். சப்பரத்தில் வரும் சண்டிகேஸ்வரரை பெண் பக்தர்களே உற்சாகமாக வடம் பிடித்து செல்வர். தற்போது சப்பரத்திற்கு பதிலாக சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. புதிய தேர் நேற்று கோயில் ராஜகோபுரத்திற்கு முன்னதாக பீட ஸ்தானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டு பூஜைகள் நடந்தன. இன்று காலை புதிய தேரில் கலசங்கள் வைத்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து இந்த தேரின் வெள்ளோட்டம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. சதுர்த்தி விழாவின் மூன்றாம் நாளான இன்று காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இரவு 8:30 மணிக்கு சுவாமி பூதவாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும்.