Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ... விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா; ஏராளமானோர் பங்கேற்பு விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு பூஜை கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு பூஜை கோலாகலம்

பதிவு செய்த நாள்

18 செப்
2025
11:09

பொள்ளாச்சி ; புரட்டாசி முதல் நாளான நேற்று, கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பொள்ளாச்சி கடைவீதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத துவக்கத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபாடு செய்தனர். டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவில், ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், புரட்டாசி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. * வால்பாறை அடுத்துள்ள, அக்காமலை பாலாஜி கோவிலில் புரட்டாசி முதல் நாளான நேற்று சிறப்பு பூஜை நடந்தது. காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு அபிேஷகபூஜையும் நடந்தது. தொடர்ந்து, காலை, 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் பாலாஜி சுவாமி அருள்பாலித்தார். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமிக்கு, நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு அலங்கார பூஜையும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் அருள்பாலித்தார்.


* உடுமலை தளி ரோட்டில், உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவிலில், தங்க கவச அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலித்தார். இதே போல், உடுமலை சுற்றியுள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு, சிறப்பு அலங்காரம் நடந்தது. – நிருபர் குழு –

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar