Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா; ... மன்னேரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு பூர்த்தி விழா மன்னேரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,500 துாண்களுடன் எழுப்பப்படும் பிரமாண்ட கோவில்; அதானி நிறுவனம் சாதனை
எழுத்தின் அளவு:
 1,500 துாண்களுடன் எழுப்பப்படும் பிரமாண்ட கோவில்; அதானி நிறுவனம் சாதனை

பதிவு செய்த நாள்

19 செப்
2025
10:09

ஆமதாபாத்; குஜராத்தின் ஜகத் ஜனனி மா உமியா கோவிலுக்கு, 1,500 துாண்கள் தாங்கக்கூடிய அளவிலான மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்து ‘அதானி சிமென்ட்’ நிறுவனம் சாதனை படைத்துள்ளது.


குஜராத்தின் ஆமதாபாதில் ஜகத் ஜனனி மா உமியா கோவில் கட்டப்பட்டு வருகிறது. உலகிலேயே மிக உயரமான கோவில் என்ற பெருமையை பெறும் வகையில், 1,500 துாண்களுடன், தரையில் இருந்து 504 அடி உயரத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணியில், அதானி நிறுவனத்தின் சிமென்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஜகத் ஜனனி மா உமியா கோவிலுக்கான அடித்தளம் அமைக்கும் பணி சமீபத்தில் நடந்தது. மிக உயரமான, 1,5--00 துாண்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படும் கோவிலின் அடித்தளம் சிறப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அதானி சிமென்ட் நிறுவனம் மற்றும் ‘பி.எஸ்.பி., இன்ப்ரா’ நிறுவனம் இணைந்து அடித்தளம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. இதற்காக, அதானி சிமென்டின் தனியுரிம கலவையான 24,100 கன மீட்டர் உடைய ‘ஈக்கோ மேக்ஸ் எம். – 45’ எனப்படும் கார்பன் கான்கிரீட்டை பயன்படுத்தி அடித்தளம் அமைக்கப்பட்டது.


மூன்று நாட்களாக இரவு பகல் என 54 மணி நேரம் இந்த அடித்தளம் அமைக்கும் பணி நடந்தது. இதில், 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 450 அடி நீளம், 400 அடி அகலம், 8 அடி ஆழம் என்ற கணக்கில் மிகச்சிறந்த முறையில் அடித்தளம் அமைக்கப்பட்டது. கட்டமைப்பின் வெப்ப அழுத்தத்தை குறைக்கும் வகையில், 28 டிகிரி செல்ஷியசுக்கு கீழ் வெப்பநிலையை வைக்கும் வகையில், அடித்தளத்தில் ‘கூல்கிரீட் பார்முலேஷன்’ பயன் படுத்தப்பட்டுள்ளது. நவீன பொறியியல் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அடித்தளம் அமைக்கும் பணி, ‘கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தகவலை அதானி குழுமத்தின் சிமென்ட் வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் பஹேட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar