பழமையான சிவன் கோயிலில் புனரமைப்பு பணிக்காக தோண்டிய போது தங்க காசுகள், தகடுகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2025 05:09
நரிக்குடி; விருதுநகர் மாவட்டம் நரிக்குடி எஸ்.கல்விமடையில் பழமையான சிவன் கோயிலில் புனரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கிழிந்த நிலையில் 6 தங்க தகடுகள், மனித முகம் பதித்த 4 தங்க காசுகள் கண்டெடுக்கப்பட்டன. நரிக்குடி எஸ்.கல்விமடையில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான திரு நாகேஸ்வரமுடையார், நாகேஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயிலில் பழைய கட்டடங்கள், சிலைகள் சேதமடைந்திருந்தன. கோயிலை புனரமைத்து கோபுரம் கட்ட ரூ. 2 .10 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. நேற்று அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்த போது, 10 அடி ஆழத்தில் தங்கத்தகடுகள், காசுகள் கண்டெடுக்கப்பட்டன. தகவலறிந்த அறநிலையத்துறையினர் அவற்றை பாதுகாப்பாக வைத்தனர். பழமையான இக்கோயிலை அகழ்வாராய்ச்சி செய்தால் பல்வேறு ரகசியங்கள், புதையல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என அப்பகுதியினர் கூறினர்.