திருவாடனை பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2025 01:09
திருவாடானை: தொண்டியில் உந்திபூத்தபெருமாள், திரு வாடானை அருகே பாண்டுகுடி லட்சுமி நாராயண பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள் கோயில்களில் நேற்று புரட்டாசி இரண்டாவது சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பால், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகையான அபிேஷ கங்கள் நடந்தது. மலர், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி யுடன் பெருமாள் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.