Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தோஷத்தை போக்க நெய் விளக்கேற்றி நாக ... கந்தசஷ்டி ஆரம்பம்; சஷ்டி நாயகன் முருகன் அருளால் எல்லா வரமும் பெறுவோம்! கந்தசஷ்டி ஆரம்பம்; சஷ்டி நாயகன் ...
முதல் பக்கம் » துளிகள்
காபி தோட்டத்திற்குள் அழகிய கணபதி கோவில்
எழுத்தின் அளவு:
காபி தோட்டத்திற்குள் அழகிய கணபதி கோவில்

பதிவு செய்த நாள்

21 அக்
2025
10:10

கர்நாடகாவின் மலைநாடு மாவட்டம் என்று அழைக்கப்படும் சிக்கமகளூரு, சுற்றுலாவுக்கு எந்த அளவுக்கு பெயர் பெற்றதோ, அதே அளவு ஆன்மிக தலங்களுக்கும் பெயர் பெற்றது. சிருங்கேரி சாரதாம்பா, கலசா கலசேஸ்வரர் உட்பட மாவட்டத்தில் பல முக்கிய கோவில்கள் உள்ளன. இதில் ஒன்று, சாம்சே கிராமத்தில் உள்ள கணபதி கோவில்.


கோவில்கள் பெரும்பாலும் மலை உச்சியில், சமமான தளத்தில் இருக்கும். ஆனால் சாம்சே கணபதி கோவில், காபி தோட்டத்திற்குள் அமைந்து உள்ளது. 100 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கோவில், இயற்கை எழிலுக்கு மத்தியில் பிரமிப்பை அளிக்கிறது. தினமும், காபி தோட்டத்திற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள், விநாயகரை தரிசித்த பின், வேலையை துவக்குகின்றனர். வனவிலங்கு தாக்குதலில் இருந்து விநாயகர் தங்களை பாதுகாப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.


மூலஸ்தானத்தில் பாறையில் உருவான, பிரமாண்ட விநாயகர் சிலை உள்ளது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. கிராமத்தில் வசிப்போர் திரளாக கலந்து கொள்வதுடன், பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து விநாயகரை தரிசித்து செல்கின்றனர்.


சுற்றுலா பயணியர் வாகனத்தில் செல்லும் போது, துாரத்தில் இருக்கும் பார்க்கும் போது, காபி தோட்டம் மட்டும் தான் உள்ளது என்று நினைத்து வருகின்றனர். இங்கு வந்து பார்க்கும் போது தான் கோவிலும் இருப்பது தெரிகிறது. காபி தோட்டங்களுக்குள் சென்று புகைப்படம் எடுத்து கொள்வதுடன், விநாயகரை தரிசித்தும் செல்கின்றனர். கலசாவில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையின் இருபக்கமும் பச்சை, பசலென காட்சி அளிக்கும். 

 
மேலும் துளிகள் »
temple news
சூரபத்மனால் தேவர்கள், “உங்களைப் போன்ற பலமுள்ள ஒரு இளைஞனை எங்களுக்கு தர வேண்டும்" என சிவபெருமானிடம் ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 
temple news
கொப்பால் மாவட்டத்தில் பக்தர்களை ஈர்க்கும் பல கோவில்கள் உள்ளன. குறிப்பாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar