கார் தலைநகரான பாட்னாவில் ஒரு ஆஞ்சநேயர் கோயில் உலகப்புகழ் பெற்று வருகிறது. மகாவீர் மந்திர் என அழைக்கப்படும் இந்த ஆஞ்சநேயர் கோயிலின் ஒருநாள் சராசரி வருமானம் ஒரு லட்சம் ரூபாய். இதன் வருடவருமானம் சுமார் 6.5 கோடி ரூபாய்! ஆறு கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் வந்தாலும் இந்தக் கோயிலுக்கான அதிகபட்ச செலவே 80 லட்சம் தான்! எனவே மீதிப் பணத்தை வைத்து ஒரு டிரஸ்ட் அமைத்தனர்! கோயில் சார்பாக பொது மருத்துவமனை, சிறுவர் மருத்துவமனை, கேன்சர் மருத்துவமனை, கண் மருத்துவமனை... பாதிக்கப்பட்டோர்ருக்கு மறு வாழ்வு இல்லம் என பலவற்றை ஏற்படுத்தி மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். கோயில் நடத்தும் கேன்சர் மருத்துவமனையின் சிறந்த சேவையைக் கண்ட பீகார் அரசு... தன் பங்காக ஐந்து கோடி ரூபாய் அன்பளிப்பு வழங்கியுள்ளது. மகாவீர் கோயிலில், சீதை-ராமர் இலட்சுமணனுக்கு ஒரு சன்னதி உண்டு. வடநாட்டுக் கோயில்களிலேயே மிக அதிக வருமானம் கொண்ட கோயில் வைஷ்ணவி தேவி கோயில். அதற்கு அடுத்த இடத்தை இந்த மகாவீர் மந்திர் பிடித்துவிட்டது...!