நாகப்பட்டினம் வேதாரண்யம் வட்டத்தில் இருக்கிற புஷ்பவனம் என்கிற கிராமத்தில்தான் கடலோரத்தில் அய்யனார் கோயில் இருக்கிறது. காஞ்சியப்ப அய்யனார் எனவும் இவர் அழைக்கப்படுவார். கஞ்ச அப்ப அய்யனார் என்றிருந்த பெயர்தான், காஞ்சியப்ப அய்யனாராகிப் போனது. கஞ்சம் என்றால் தாமரை என்கிற அர்த்தத்தில்தான் இந்தப் பெயர் வந்திருக்கிறது. நாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள பல ஊர்க்காரர்களின் குலதெய்வமாக இந்த அய்யனாரை வழிபடுகின்றனர்.