திருச்செந்துார் கந்த சஷ்டி விழா; குவியும் பக்தர்கள்.. இன்று மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2025 10:10
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக கோவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரையான 6 நாட்களில் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். இந்த கந்த சஷ்டி விரதமானது, முருகனின் ஆறுபடை வீடுகளில் 2ம் வீடான திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 22 ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் இன்று (27 ம் தேதி) மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதில் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள். 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 28ம் தேதி திருக்கல்யாண விழா சிற்பபாக நடைபெற உள்ளது.