சிலுவத்தூரில் பகவதியம்மன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2025 01:10
நத்தம்; சாணார்பட்டி அருகே சிலுவத்தூர் பகவதியம்மன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நேற்று முன்தினம் தீர்த்தக் குடங்கள் அழைத்தல், கோபூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்டவைகளுடன் முதல் கால யாக பூஜை தொடங்கியது. நேற்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், தேவதா அனுக்ஞை ஹோமம் ஆகியவை நடைபெற்றன.யாக பூஜையைத் தொடர்ந்து திருச்செந்தூர்,ராமேஸ்வரம், அழகர் கோவில், திருமலைகேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தக் குடங்கள் மேளதாள முழக்கங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோயிலைச் சுற்றி வந்து விமானத்தை அடைந்தன. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் கலசத்திற்கு ஊற்றப்பட்டு கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.அன்னதானமாக வழங்கப்பட்டது.