தினமும் அதிகாலை திருப்பதி பெருமாளை வழிபடும் நவக்கிரகங்கள் !
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2025 03:11
தினமும் அதிகாலையில் நவக்கிரகங்கள் ஒன்பதும் திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் திருவடி தரிசனம் பெற காத்திருப்பதாக சுப்ரபாதத்தின் 18வது ஸ்லோகம் கூறுகிறது. நவக்கிரகங்கள் கடமையாற்றச் செல்லும் முன் இங்கு வழிபாடு செய்வதால், ஏழுமலையானை வணங்கும் பக்தர்களுக்கு கிரக தோஷத்தால் பிரச்னை உண்டாகாது. திருமாலின் பக்தர்களை ‘மறந்தும் புறந்தொழா மாந்தர்’ என்பர். அதாவது திருமாலைத் தவிர வேறு தெய்வத்தை வணங்காதவர்கள். இதனால் பெருமாள் கோயில்களில் கிரகங்களை வழிபடும் வழக்கம் இல்லை.