சிவன் கோயில்களில் கார்த்திகை 4வது சோமவார சங்காபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2025 03:12
மானாமதுரை; மானாமதுரை, இளையான்குடியில் உள்ள சிவன் கோயில்களில் கார்த்திகை 4வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் கார்த்திகை மாதத்தின் 4வது சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கும், நந்தியம் பெருமானுக்கும் பால்,பன்னீர், சந்தனம், தயிர், இளநீர், நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு கோயில் வளாகத்தில் 108 சங்குகளை வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீரால்சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.
*இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன்,சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயில்களிலும் அதிகாலை சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்று அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் இளையான்குடி, பரமக்குடி சாலைக்கிராமம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.