சின்னசேலம் நித்யகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் தனுர் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2025 12:12
சின்னசேலம்: சின்னசேலம் பெருந்தேவி தாயார் சமேத நித்யகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி 2ம் நாள் தனுர் பூஜை நேற்று நடந்தது. தாயார் சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி, வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வழிபாடுகளை ஜெயக்குமார் பட்டாச்சாரியார் செய்து வைத்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.