திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் கஜ கோபுரம் அர்ப்பணிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2025 02:12
பாலக்காடு; புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவிலில் புதிதாக நிறுவிய கஜகோபுர அர்ப்பணிப்பு நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு நகர் அருகே உள்ளது புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் புதிதாக நிறுவிய கஜ கோபுரத்தின் அர்ப்பணிப்பு மற்றும் திறப்பு விழா இன்று நடந்தது. கோபுர அர்ப்பணிப்பு நிகழ்வுகள் கோவில் தந்திரி அண்டலாடி உன்னி நம்பூதிரிப்பாடின் தலைமையில் நடந்தது. காலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம், பிம்பசுத்தி, தார, பஞ்சகம், பஞ்சகவ்யம், கலசாபிஷேகம் ஆகியவை நடந்தது. 9:15 மணியளவில் செண்டை மேளம் முழங்க யானை அணிவகுப்புடன் கஜ கோபுர அர்ப்பணிப்பு மற்றும் திறப்பு விழா நடந்தது. தொடருங்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நிறமாலை தரிசனம், சுற்றுவிளக்கு ஏற்றுதல், நாமசங்கீர்த்தனம் ஆகியவை நடந்தது. ஒரு கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய இந்த கஜ கோபுரத்தை மும்பையில் குடியிருக்கும் புத்துர் பகுதியை சேர்ந்த எ.வி., மேனோன் காணிக்கையாக வழங்கினார். சிற்ப நேர்த்தியான இந்த பிரம்மாண்ட கஜ கோபுரம் பாரம்பரியத்தின் புதிய அடையாளமாக மாறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.