திருப்பதியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2025 03:12
திருப்பதி; ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு செய்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று, பின்னர் தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். ரங்கநாயக்க மண்டபத்தில் அர்ச்சகர்கள் அவருக்குப் பட்டு வஸ்திரங்களை அணிவித்து, சுவாமியின் பிரசாதங்களை வழங்கிக் கௌரவித்தனர்.
திருப்பதியில் பாரதிய விஞ்ஞான் சம்மேளனத்தில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: அறிவியல் மற்றும் தர்மத்திற்கு இடையிலான ஒரே வித்தியாசம் அவற்றின் வழிமுறைகளில்தான் உள்ளது. ஏனெனில் இரண்டுமே ஒரே இறுதி இலக்கை நோக்கமாகக் கொண்டுள்ளன. அறிவியலுக்கும், தர்மத்திற்கு இடையே எந்த முரண்பாடும் இல்லை. தர்மம் என்பது பெரும்பாலும் மதமாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. நாம் அனைவரும் இந்த உலகத்திற்கு நிறைய கடமைப்பட்டுள்ளோம். நமக்கு மன திருப்தி இல்லையென்றால், மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மகிழ்ச்சியும், துக்கமும் தற்காலிகமானவை. அறிவியலின் மூலம் மட்டுமே மனிதகுலத்திற்கு வசதிகள் வழங்கப்படும். இந்தியா நிச்சயமாக உலகில் ஒரு சிறந்த நாடாக மாறும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.