பாலக்காடு; பாலக்காட்டில் அதிருத்ர மகாயக்ஞம் துவங்கியது.
கேரள மாநிலம் பாலக்காடு தாரேக்காடு கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி சேவாசமதியின் சார்பில் வரும் 31ம் தேதி வரை நடக்கும் அதிருத்ர மகாயக்ஞம் நேற்று துவங்கியது. பிரஹ்மஸ்ரீ வெங்கடேஸ்வர தீக்ஷிதரின் தலைமையில் நடக்கும் மகாயாக ஆரம்ப நிகழ்ச்சியை நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரன் துவக்கி வைத்தார். குருவாயூர் கோவில் நிர்வாக குழு தலைவர் விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சத்தீஸ்கர் ஸ்ரீ சக்கர மகாமேருபீடம் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த ஸ்வாமிகள் ஆசி சொற்பொழிவாற்றினார். சேவாசமதியின் தலைவர் ராமசாமி, துணைத் தலைவர் சந்திரமவுலீஸ்வரன், செயலாளர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.