பதிவு செய்த நாள்
04
ஜன
2013
11:01
ஸ்ரீபெரும்புதூர்: சிறப்பு தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில், வல்லக்கோட்டை சுப்ரமணியசாமி கோவில் நிர்வாகத்திற்கு, புத்தாண்டு அன்று 2.51 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. வல்லக்கோட்டையில், ஏழு அடி உயரத்தில், வள்ளி,தெ#வானை சமேதமாக, சுப்பிரமணியசுவாமி காட்சியளிக்கின்றார். இக்கோவில், ஆண்டு தோறும், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, மூலவர் முத்தங்கி அலங்காரத்துடன், பக்தர்களுக்கு காட்சியளிப்பார். புத்தாண்டில், இரவு 12:05 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். இதை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வந்து, சாமியை வழிபட்டு செல்வது வழக்கம். கடந்த 31ம் தேதி, நள்ளிரவு 12:05 மணிக்கு, சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. அன்றைய தினம், ஏராளமானோர் வழிப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு நுழைவு கட்டண திட்டத்தை கோவில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி இருந்தது. சிறப்பு நுழைவு கட்டணம் 20ரூபா# மூலம், 60, 820ம், 50 ரூபா# நுழைவு கட்டண மூலம், ஒரு லட்சத்து, 62 ரூபாயும், அர்ச்சனை டிக்கெட் மூலம் 26,100 ரூபாயும், முடிகாணிக்கை கட்டணமாக, 2,530 ரூபா# என, 2.51 லட்சம் ரூபாய் வருவா# கிடைத்துள்ளது. இதுகுறித்து கோவில் பக்தர் ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டை விட இந்தாண்டு, கூடுதலாக பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செ#துள்ளனர், என்றார்.