பதிவு செய்த நாள்
04
ஜன
2013
11:01
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் 50ம் ஆண்டு திருவிழா வரும் 6ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. 6ம் தேதி காலை 5.30 மணிக்கு 108 வேத விற்பன்னர்களின் மகா யாக பூஜையுடன் துவங்குகிறது. காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.சிறப்பு பூஜைகளும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. திருவிழா நாட்களில் அம்மனுக்கு மூன்று நேரமும் சிறப்பு பூஜையும், வழிபாடும், நடக்கிறது. 6ம் திருவிழா அன்று இரவு அம்மன் சப்பரம் மகிழ்வண்ணநாதபுரம், 7ம் நாள் பெத்தநாடார்பட்டி, பொட்டலூர், 8ம் நாள் நவநீத கிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், 9ம் நாள் நாகல்குளம் ஆகிய ஊர்களுக்கு வீதியுலா செல்கிறது. 10ம் திருவிழா நிறைவு நாளில் வில்லிசை நிகழ்ச்சி, பாண்டு வாத்தியமும், மகுட ஆட்டம், கணில் ஆட்டம், செண்டா மேளம், மெல்லிசை கச்சேரி நடக்கிறது. இரவு அம்மன் சப்பர வீதியுலாவும் வாணவேடிக்கை, பூக்குழி இறங்குதல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டி செய்து வருகின்றார்.