பெரியநாயகியம்மன் கோயிலில் தடுப்பு சுவர் கட்டும் பணி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2013 11:01
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் உள்ள ஐம்பொன் சிலைகளை பாதுக்காக்க தடுப்பு சுவர் கட்டும் பணி துவங்கியது.ஊர் கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயில் பழநி கோயிலின் உப கோயிலாகும். தைப்பூசம், வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் உள்ளிட்டவை இந்ந கோயிலில் தான் நடைபெறும். முத்துக்குமாரசாமி சன்னதியின் இரண்டு பக்கமும் 80-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. 63 நாயன்மார்கள் மற்றும் அழகுநாச்சியம்மன், மாரியம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர் என 19 பரிவார(உற்சவர்) சிலைகளும் உள்ளன. பழம் பெருமை வாய்ந்த இந்த ஐம்பொன் சிலைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு கிரிலுடன் கூடிய தடுப்பு சுவர்கள் கட்டும் பணி துவங்கியுள்ளது. கிரிலுக்கு வெளியே இருந்து இந்த சிலைகளை பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்யலாம்.கழிப்பறை: இக்கோயிலின் வெளியே பக்தர்கள் வசதிக்காக கழிப்பறைகள் கட்டும் பணியும் துவங்கியுள்ளது. ஆண்களுக்கு 9, பெண்களுக்கு 9 கழிப்பறையும் கட்டப்பட உள்ளது. மேற்கண்ட கட்டுமான பணிகள் 30 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.