இந்து மக்கள் கட்சி நடத்திய இவ்விழாவில் திருவாரூர் சுவாமிகள் என அழைக்கப்படும் ஸ்ரீசங்கர நாராயண பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ சங்கர தீர்த்த சுவாமிகள் ஆசி வழங்கி பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் வீர பாலு, மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஜெயராமன், மாநில பொறுப்பாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோருக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, தேங்காய், வாழைப்பழம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், சூடம், சாம்பிராணி, பத்தி, விபூதி,குங்குமம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.