ஸ்ரீ ராம பஜனை சபா சார்பில், 65 வது ஸ்ரீராதா கல்யாண மகா உற்சவம் நேற்று துவங்கியது. திருப்பூர், முன்சீப் சீனிவாசபுரம், ஸ்ரீராம பஜனை சபாவில், நேற்று அஷ்டபதி பஜனையுடன் சீதா கல்யாண மஹா உற்சவம் துவங்கியது. இரவு, 8:00 மணிக்கு, திவ்ய நாம பஜனை நடந்தது.
இன்று காலை, 9:00 மணிக்கு உஞ்சவிருத்தியும், காலை, 10:00 மணிக்கு ஸ்ரீராதா கல்யாணம், மஹா தீபாராதனை, ஆஞ்சநேய உற்சவமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து, சென்னை அஸ்வின்குமார் பாகவதரின் சொற்பொழிவு நடப்பதாக, விழாவிக்குழுவினர் தெரிவித்தனர்.