பதிவு செய்த நாள்
07
ஜன
2013
10:01
ஷீரடி: மகாராஷ்டிரா மாநிலம், ஷீரடி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில், புத்தாண்டையொட்டி, 16.50 கோடி ரூபாய், உண்டியல் மூலம் வருமானம் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக, கோவில் நிர்வாகம் கூறியுள்ளதாவது: கடந்த, டிச., 22 ம்தேதி முதல், நாடெங்கிலும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் சாய்பாபாவை தரிசிக்க வந்தனர். அன்று முதல், இம்மாதம், 3ம் தேதி வரை, கோவில் உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம், 15.50 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. அத்துடன், 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி ஆபரணங்களும், 49 லட்சம் மதிப்பிலான, 39 நாடுகளின் கரன்சிகளும் கிடைத்தன. அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கரன்சிகள், 3.68 கோடி ரூபாய்க்கு, உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. 6.5 லட்சம் பக்தர்கள் பிரசாதம் வாங்கியதில், 8.50 லட்சம் ரூபாய் கிடைத்தது. தற்போது, சாய்பாபா சமஸ்தான் பொக்கிஷத்தில், 300 கிலோ தங்கம், 350 கிலோ வெள்ளி இருப்பில் உள்ளது. சமஸ்தானின் மொத்த கையிருப்பு, 1,400 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதில், 775 கோடி ரூபாய், பல்வேறு வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.