வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்து வாழும் உங்களுக்கு, மாசி மாதம் யோகமான மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்தது நடந்தேறும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பெரிய மனிதர்களின் ஆதரவு ஏற்படும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாளாக முயற்சித்து வந்தும் முடிவிற்கு வராத வேலைகள் இப்போது நிறைவேறும். சப்தமாதிபதி புதன் வக்கிரம் அடைவதால் அதை திட்டமிட்டு செயல்படுவது நன்மை தரும். பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஒரு முறைக்கு இருமுறை படித்துப் பார்ப்பது நன்மையாகும். புதிய முதலீடு செய்வதற்கு முன் மார்க்கெட் நிலவரம் தெரிந்து கொள்வது அவசியம். புதிய இடம், வீடு வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பெரியோரின் ஆலோசனை இந்த நேரத்தில் உங்களுக்கு பயனளிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஆலோசித்து எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். மார்ச். 6 முதல் அர்த்தாஷ்டம சனி தொடங்குவதால் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும். சனி பகவானின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். மனதில் குழப்பம் உண்டாகலாம். எடுக்கும் வேலைகளில் தடை, தாமதம் என்ற நிலை உருவாக வாய்ப்பு இருப்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: பிப்.28
அதிர்ஷ்ட நாள்: பிப்.16, 21, 25. மார்ச் 3, 7, 12
பரிகாரம்
விநாயகரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.
பூராடம்
லட்சியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, மாசி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரிகளுக்கு ஏற்பட்ட தடைகள் விலகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மூலதனத்திற்கு ஏற்ப ஆதாயம் உண்டாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், ராகுவும் போட்டி போட்டுக் கொண்டு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். எடுக்கும் வேலைகளை ஆதாயமாக்குவர். பொருளாதார நெருக்கடி என்பது இந்த மாதத்தில் இருக்காது. தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும் பிப்.22 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகோதரர் ஒற்றுமை அதிகரிக்கும். தன்னம்பிக்கை, தைரியம் கூடும். உடல் பாதிப்பு விலகும். துணிச்சலுடன் செயல்படும் நிலை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். விவசாயம், மருத்துவம், கெமிக்கல், உணவகம் தொழில்கள் முன்னேற்றம் அடையும் என்றாலும், மார்ச் 6 முதல் உங்கள் தன குடும்பாதிபதி சனி பகவான் சகாய ஸ்தானத்தை விட்டு சுக ஸ்தானத்திற்கு செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். பணியாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 1
அதிர்ஷ்ட நாள்: பிப். 15, 21, 24. மார்ச் 3, 6, 12
பரிகாரம்
கோமதி அம்மனை வழிபட குறைகள் தீரும். நன்மை நடக்கும்.
உத்திராடம் 1 ம் பாதம்
முதலிடத்தை நோக்க முன்னேற விரும்பும் உங்களுக்கு, மாசி மாதம் முன்னேற்றம் தரும். ஆத்ம காரகன் சூரியன், யோகக்காரகன் ராகுவுடன் இணைந்து சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். செல்வாக்கு உயரும். நேற்று வரை கேள்விக்குறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். லாபம் தரும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை உண்டாக்கும். பிப்.22 முதல் தைரிய வீரிய காரகன் செவ்வாயும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில், வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். பொருளாதார நிலை உயரும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். உடல் பாதிப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்களும் மீண்டும் சேரும் நிலை உண்டாகும். தெய்வத்திடம் வைத்த வேண்டுதல் நிறைவேறி கோயிலுக்கு சென்று மகிழ்வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும். எடுத்த வேலைகளில் வெற்றியுண்டாகும் என்றாலும், வித்யா காரகன் புதன் வக்கிரமடைவதால் மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: மார்ச் 2
அதிர்ஷ்ட நாள்: பிப்.19, 21, 28. மார்ச் 1, 3, 10, 12
பரிகாரம்
நடராஜரை வழிபட தோஷம் விலகும். நன்மை நடக்கும்.
மேலும்
மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை) »