Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம் : மாசி ராசி பலன் மீனம் : மாசி ராசி பலன் மீனம் : மாசி ராசி பலன்
முதல் பக்கம் » மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை)
கும்பம் : மாசி ராசி பலன்
எழுத்தின் அளவு:
கும்பம் : மாசி ராசி பலன்

பதிவு செய்த நாள்

11 பிப்
2026
12:02

அவிட்டம் 3, 4 ம் பாதம்

எந்த ஒன்றிலும் போராடி வெற்றியடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் உழைப்பால் உயர்வு காணக்கூடிய மாதமாகும். பிப். 21 வரை உச்சம் அடைந்திருக்கும் செவ்வாய் உங்கள் தைரியத்தை அதிகரிப்பார். வேலைகளை வெற்றியாக்குவார். செலவின் வழியே செல்வாக்கை உயர்த்துவார். பிப். 22 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் சிந்திக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது புதிய நபர்களால் படிப்பினையை உண்டாக்குவார். கணவன் மனைவிக்குள் ஒரு இடைவெளியை ஏற்படுத்துவார். நன்றாகப் பழகி வந்த நண்பர்களும் உங்களை விட்டு விலகிச் செல்லக்கூடிய நிலையை உருவாக்குவார். தொழில் உங்களி் எதிர்பார்ப்பு இழுபறியாகும் என்பதால், புதிய முயற்சிகளைத் தவிருங்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நிம்மதிக்கு வழிவகுக்கும். பணியாளர்கள் வேலையில் கவனமாக இருப்பது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 4.

அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 18, 26, 27. மார்ச் 8, 9.

பரிகாரம்

வாயு மைந்தனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


சதயம்

பெரிய பெரிய திட்டங்கள் தீட்டி அதைநோக்கி பயணித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு உங்கள் ஆசைகளை அதிகரிப்பார். பிறரால் முடிக்கமுடியாத வேலைகளைக்கூட முடிக்க வைப்பார். சப்தமாதிபதி சூரியன் மாதம் முழுவதும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் எடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்ற வேகம் உண்டாகும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். மார்ச். 6 முதல் ஜென்ம சனி உங்களை விட்டு விலகுவதால் நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். பூர்வ புண்ணியாதிபதி புதன் பிப். 20 வரை எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். புதிய இடம் வீடு வாங்கும் கனவை நனவாக்குவார்.  குடும்பத்தில் நிம்மதியான நிலையை உண்டாக்குவார். வெளியூர் பயணத்தின் வழியே ஆதாயத்தை ஏற்படுத்துவார். பணியாளர்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும் என்றாலும் புதிய நட்புகளிடம் கவனமாக இருப்பது நல்லது. யாரிடமும் உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். உங்கள் ரகசியங்களையும் கூற வேண்டாம். பெண்கள் இந்த மாதம் முழுவதும் அந்நியர்களிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 5.

அதிர்ஷ்ட நாள்: பிப். 13, 18, 22, 26. மார்ச் 4, 8, 13.

பரிகாரம்

விஷ்ணு துர்கையை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.


பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்

தடைகளை எல்லாம் தாண்டி வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் சிந்தித்து செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் தன, லாபாதிபதியான குரு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் நிதானம் தேவை. எதையும் திட்டமிட்டு செய்தால் மட்டுமே லாபத்தை அடையமுடியும். ராசிக்குள் சூரியன், ராகு, மார்ச். 6 வரை சனி, பிப். 22 முதல் செவ்வாய் என்று கூட்டணி அமைத்திருப்பதால் ஒரே நேரத்தில் நான்கு பக்கங்களிலும் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள். வேலைகளில் நெருக்கடி அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் அவசர அவசரமாக இறங்கி அதில் சங்கடத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். புதிய முதலீடுகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என்றாலும், மாதம் முழுவதும் உங்கள் பாக்யாதிபதி சுக்கிரன் சாதமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். பொன், பொருளும், புதிய வாகனமும் வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் கூடியேறுவீர்கள். மார்ச் 6 முதல் சனி பகவானின் பார்வை சுக ஸ்தானத்திற்கும், அஷ்டம ஸ்தானத்திற்கும் கிடைப்பதால் உடல் நிலையில் கவனம் செலுத்தி வருவது நல்லது. சட்டத்திற்குப் புறம்பான வேலைகளால் சங்கடம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை ஒதுக்கி வைப்பது நன்மையை தரும். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை எப்போதும் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இந்த மாதம் முழுவதும் உங்களை சரியான வழியில் நடைபோட வைக்கும். நண்பர்களை அனுசரித்துச் செல்வதால் உங்கள் பலம் கூடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். 

சந்திராஷ்டமம்: மார்ச் 6.

அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 21, 26. மார்ச் 3, 8, 12.

பரிகாரம்

பண்ணாரி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.

 
மேலும் மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளில் உறுதியாக இருந்து வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்மன உறுதி கொண்ட உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதமாகும். அஷ்டம ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்பிறருக்கு வழிகாட்டியாக வாழும் உங்களுக்கு, மாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ... மேலும்
 
temple news
மகம்நினைத்ததை சாதிப்பதில் வல்லமை கொண்ட உங்களுக்கு, மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar