மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2026 04:02
தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நாளை நிறைவு பெறுகிறது. இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.
தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மனுக்கு விக்ரகம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. பல ஆண்டுகளாக அணையாத நெய் விளக்கு எரிகின்றது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. பிப்., 15 முதல் மாசி மகா சிவராத்திரி திருவிழா துவங்கியது. தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று 7 ம் நாள் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் சிலர் கரும்பு தொட்டிலில் குழந்தையை உட்காரவைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை (பிப்.22) 8 ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
தினமலர் செய்தி எதிரொலி: கோயில் பிரகாரம் வழியாக ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு வருகின்றனர். பகலில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கோயில் நிர்வாகம் குடிநீர் வசதி செய்து தரவில்லை என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கோயில் நிர்வாகம் குடிநீர் வசதி செய்து தந்துள்ளது.